ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC Annual Planner 2019 | டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை வெளியீடு

TNPSC Annual Planner 2019 | டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை வெளியீடு

இப்பட்டியல் மாதாந்திர வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்துகொள்ள ஏதுவாக இவ்வட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2019-ம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு அட்டவணையை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2019-ம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் மாதாந்திர வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்துகொள்ள ஏதுவாக இவ்வட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் பட்டியலில் குறிப்பிடாத பணிகள் / தேர்வுகள் குறித்த அறிவிக்கைகளும் தக்க நேரத்தில் வெளியிடப்படும்.

கடந்த 3 ஆண்டுகளின் வருடாந்திர கால அட்டவணையின்படி தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பெற்ற தேர்வுகளின் விபரம்:  2016-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 17 அறிவிக்கைகள் மூலம், அனைத்து 17 தேர்வுகளும் நடத்தப்பட்டு 6,383 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

2017-ம் ஆண்டில்15,008 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 24 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டது. அதில் அனைத்துத்  தேர்வுகளும் நடத்தப்பட்டு, 22 அறிவிக்கைகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 தேர்வுகளுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்பட வேண்டியுள்ளது.

2018-ம் ஆண்டில் 23 பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட உத்தேசிக்கப்பட்டு அதில் 15 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டது. மேலும் புதிதாக 16 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அதில்  மொத்தம் 15 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 16 பதவிகளுக்கான தேர்வுகள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இவற்றின் மூலம் 4,365 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் உரிய காலத்தில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:

Also Watch:

First published:

Tags: Group Exams, TNPSC