இனி ஆதார் இருந்தால் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியும்... தமிழக அரசு அதிரடி!

இனி ஆதார் இருந்தால் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியும்... தமிழக அரசு அதிரடி!
(கோப்பு படம்)
  • News18
  • Last Updated: February 7, 2020, 7:12 PM IST
  • Share this:
தேர்வு முறைகேடுகளை அடுத்து புதிய தேர்வு முறைகளை அறிவித்த டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் 6 மாற்றங்கள்...!

1. தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவு பெற்ற உடன், இறுதியாக தேர்வான நபர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்


2. தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவு பெற்ற உடன், தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை இணையதளம் வழியே உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

3. கலந்தாய்வு நடக்கும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை வாரியாக, மாவட்ட வாரியாக, இட ஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் & காலியிடங்கள் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்

4. தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, 3 மாவட்டங்களை தங்களுடைய தேர்வு மைய விருப்பமாக தேர்வு செய்யலாம். தேர்வர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேர்வு மையத்தை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்5. தேர்வு எழுத வரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கபடுவர்

6. தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனுமிருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து, முழுவதும் தடுக்கும் உயர் தொழில் நுட்பத் தீர்வு நடைமுறைபடுத்தப்படும்

First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்