Home /News /employment /

டிஎன்பிஎஸ்சி : குரூப் 4 பதவிக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி : குரூப் 4 பதவிக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4

டிஎன்பிஎஸ்சி குரூப்-4

TNPSC Group4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது. 2019 -ல் நடந்த  குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான இரண்டாம்  சான்றிதழ் சரிபார்பு மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2019-ம் ஆண்டு குரூப் -4 பணியிடங்களுக்காக தேர்வு குறித்த  அறிவிப்பு வெளியானது. இந்தப்பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 01-09-2019 அன்று நடைபெற்றது.  இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 12.11.2019 அன்று வெளியானது.

    Also Read: 10,000 அரசு வேலை.. 2022 தொடக்கமே செம..!

    இந்நிலையில் இந்த தேர்வு தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு   சென்னை , தேர்வாணைய சாலை ( பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையல் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு மட்டும் வரும் 18-12-2021 மற்றும் 20-12-2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள்/ ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஓதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில்  தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய  அழைப்புக்கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது .

    மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்ந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்ததரவரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி அளிக்க இயலாது . விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு உரிய நாட்களில் நேரத்திற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Govt Jobs, Group 4, Group Exams, Recruitment, TNPSC

    அடுத்த செய்தி