Home /News /employment /

TNPSC Group 4 தேர்வு தேதி நாளை அறிவிப்பு

TNPSC Group 4 தேர்வு தேதி நாளை அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குரூப்-4 தேர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

    குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

    இலங்கையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்கள்- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    10 வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட குரூப் -4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு குரூப் - 4 தேர்வு எப்போது நடைபெறும் அரசுப் பணியை லட்சியாகக் கொண்ட இளைஞர்கள் காத்திருந்தனர்.

    இந்தநிலையில், குரூப் - 4 தேதி நாளை (மார்ச் 29) மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Group 4, TNPSC

    அடுத்த செய்தி