Home /News /employment /

குரூப்-4 தேர்வு மூலம் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வு மூலம் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குரூப்-4 தேர்வு மூலம் 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

    குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. குரூப்-4 பிரிவு தேர்வு பலரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருந்துவருகிறது.

    இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலசந்திரன் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 7,301 காலி பணியிடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. நாளை முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

    மொத்தம் 7,382 காலி பணியிடங்கள் ஆகும். இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளது. 274 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும் இந்த 7,382 காலி பணியிடங்களில் அடக்கம். காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

    குரூப் 4 தேர்வு: தமிழில் இத்தனை மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    மேலும், தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Group 4, TNPSC

    அடுத்த செய்தி