ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

TNPSC : குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC Group 4 Result : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 7301 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட கொண்டே இருந்த நிலையில் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டும் என்று தெரிவித்திருந்தனர். இன்று வெளியிடப்பட்ட தகவலில் படி 24.07.2022 ஆம் நாள் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டி தேர்வு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.03.2022 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்பணிகளுக்குப் போட்டி தேர்வு 24.07.2022 நடைபெற்றது. சுமார் 18 லட்சம் பேர் இப்பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியிருந்தனர்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022 ஆம் ஆண்டும் அக்டோபர் மாதமே இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் படி டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும், ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்தது.

தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான அறிவிப்பில் 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான அறிவிப்பில் 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில தினங்கள் முன்பு குரூப் 4 பணியிடங்களில் 2500 பணியிடங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 7,301  பணியிடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC