ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : 2024-ம் ஆண்டில் தான் குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் அதிர்ச்சி

TNPSC : 2024-ம் ஆண்டில் தான் குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் அதிர்ச்சி

குரூப் 4

குரூப் 4

TNPSC Group 4 exams : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில் குரூப் - 4 தேர்வு காலம் 2024 என இடம்பெற்றுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தேர்வு மற்றும் கலந்தாய்வு மட்டுமே கொண்டு நடைபெறும் அதிக பணியிடங்களைக் கொண்ட குரூப் 4 தேர்வு தற்போது வெளியிடப்பட்ட அட்டவணைப் படி 2023 ஆம் ஆண்டுநடைபெறாது. உத்தேசமாகத் தேர்வுக்கான அறிவிப்பு 2023 இறுதியில் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2024 பிப்ரவரி மாதத்தில் தான் தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் 2024 மே மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான உத்தேச அளவு குறிப்பிடப்படவில்லை

2022- ம் ஆண்டுக்கான குரூப் - 4 தேர்வு முடிவுகள் :

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் - 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு 7301 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு மார்ச் மாதம் 30 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஜூலை 24 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது. சுமார் 18.5 லட்சம் பேர் இத்தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதமே வெளியிடப்படும் என்று அறிவித்தனர். ஆனால் அப்போது வெளியிடப்படாமல் டிசம்பர் மாதத்திற்குத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போனது. மாதத்தில் பாதியே முடிந்த நிலையில் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இதனால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC