2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை (TNPSC Annual Planner 2023) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிபணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அதுசார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒருங்கிணைந்த பொறியியல் பாடங்களுக்கன தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலிபணியிடங்கள் 828 ஆக இருக்கும். அதற்கான தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் குறித்து இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC