தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அட்டவணையில் முக்கிய தேர்வுகளான குரூப் 1,2,3 தேர்வுகளுக்கான விவரங்கள் இடம்பெறவில்லை.
2022 ஆம் ஆண்டு அட்டவணை 32 பிரிவுகளில் 11,982 பணியிடங்கள் கொண்டு வெளியிடப்பட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு அட்டவணை 11 பிரிவுகளில் 1,754 பணியிடங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு அறிவிக்கப்பட்ட 12 பிரிவுகளின் பணியிடங்களுக்கு வரும் வருடம் தான் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த விவரங்களும் தற்போதைய அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையில் குரூப் - 4 தேர்வுக்கான பணியிடங்கள் விவரங்கள் இடம்பெறவில்லை. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிக்கு 828 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர் பணிக்கு 762 பணியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு 101 பணியிடங்கள் ஆகியவையே அதிக எண்ணிக்கையில் வெளியாகி உள்ளது.
மேலும் பெரும்பாலான பணியிடங்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தான் முழுமையான தேர்வு பணிகள் நிறைவடைய உள்ளது. அரசு அலுவலகர்களுக்காக நடத்தப்படும் குரூப் 5 ஏ தேர்வுக்கான தகவலும் அட்டவணையில் இடம்பெறவில்லை.
தொல்லியல் துறை, சமூகநல மற்றும் உரிமைத் துறை, வனத்துறை, தமிழ்நாடு சட்டமன்ற பணிகள், தகவல் தொழில் நுட்பவியல், நூலகர் பணிகள் மற்றும் சுற்றுலாத் துறை பணிகள் 2022 ஆண்டு அட்டவணையில் இடம்பெற்றிருந்தது. இந்த ஆண்டுக்கான அட்டவணையில் இந்த துறை / பணிகள் இடம்பெறவில்லை.
அரசு வேலையில் நியமனம் ஆக வேண்டும் என்று பல மாதங்களாகத் தயார் ஆகும் இளைஞர்கள் இந்த ஆண்டு அட்டவணையினால் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் விரைவில் விடுபட்ட பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி பணியின் தேர்வு தகவலுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.
2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையைக் காண : TNPSC 2023 annual planner
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC