• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021

  • Share this:
    தமிழ்நாடு அரசால் 2005 ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். 

    இந்த பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள  Assistant System Analyst பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports University TNPESU )
    வேலையின் பெயர் Assistant System Analyst
    காலிப்பணி இடங்கள் ஒரே ஒரு காலிப்பணியிடம்
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021
    கல்வி தகுதி அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Offline (விண்ணப்பங்கள்) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ.250/-
    Others - ரூ.500/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnpesu.org/upload/SharpMX-M465N_20211013_150149.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி?

    • முதலில் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

    • அறிவிப்பினை நன்றாக படித்து விவரங்களைசரிபார்க்கவும்.

    • https://tnpesu.org/upload/SharpMX-M465N_20211013_150149.pdf

    • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

    • விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் உங்கள் மெயில் ஐடி மற்றும் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: