தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 242 காலிப்பணியிடங்கள்... பொறியியல், முதுகலை பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்பு..!

TNPCB Recruitment 2020 | தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 242 காலிப்பணியிடங்கள்... பொறியியல், முதுகலை பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்பு..!
Employment
  • Share this:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 242 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆய்வாளர், இளநிலை உதவியாளர் மற்றும் டைப்பிஸ்ட் உட்பட 242 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


காலிபணியிடங்கள் விவரம்

உதவி பொறியாளர் - 78
சுற்றுச்சுழல் ஆய்வாளர் - 70இளநிலை உதவியாளர் - 38
டைப்பிஸ்ட் - 56

ஊதியம்

உதவி பொறியாளர் - ₹37,700 – ₹1,19,500
சுற்றுச்சுழல் ஆய்வாளர் - ₹37,700 – ₹1,19,500
இளநிலை உதவியாளர் - ₹19,500 – ₹62,000
டைப்பிஸ்ட் - ₹19,500 – ₹62,000

கல்வித்தகுதி

உதவி பொறியாளர் - சிவில் இன்ஜினியர் அல்லது கெமிக்கல் இன்ஜினியர், அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் பொறியியல் / அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம். எம்.டெக். அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் / அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட எம்.இ. சுற்றுச்சூழல் மேலாண்மை.

சுற்றுச்சுழல் ஆய்வாளர் - அறிவியல் பிரிவில் முதுக்கலை பட்டம்

இளநிலை உதவியாளர் - இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளமோ மற்றும் கணிணி தொழில்நுட்பத்தில் 6 மாத காலத்திற்கான சான்றிதழ்

டைப்பிஸ்ட் - இளங்கலை பட்டம் மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழில் உயர் தரத்தை தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி மற்றும் கணினி பாடத்தில் டிப்ளோமா / சான்றிதழ் குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு தேர்ச்சி பெறுதல்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தட்டச்சு செய்பவர்களுக்கான குறுகிய பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் தேர்வுக்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்வதற்கான திறன் சோதனைக்கு உட்படுவார்கள்.

தேர்வு கட்டணம்

பிற்ப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் (OC, BC, MBC) - ரூ.500

எஸ்.சி, எஸ்.டி மற்றம் மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு - ரூ.250

மேலும் முழு விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 24-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று (மே 17) வரை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம் என்று தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading