சென்னை , இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் அருள்மிகு முல்லை வனநாத சுவாமி திருக்கோயிலுக்கு அர்ச்சகர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அர்ச்சகர் பணியிடத்திற்கு 11.11.2021 நாளில் விளம்பரப்படி ஏற்கனவே செய்யப்பட்ட விண்ணப்பம் கோரும் அறிவிப்பு நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் தற்சமயம் புதிதாக விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் மற்றும் சம்பள விகிதம் | காலியிடங்கள் | கல்வித் தகுதி |
அர்ச்சகர் 7 வது ஊதியக்குழு ஊதியம்4700 - 7800 + 1250 நிலை 15ஆரம்ப சம்பளம் ரூ. 15,300/- | 01 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி , சிவ ஆகம தகுதிச் சான்று , திருக்கோயில்களில் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஆகம பயிற்சி நிறுவனத்தில் 3 வருட பயிச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். |
பரிச்சரகர் 7 வது ஊதியக்குழு ஊதியம்3900 - 7400 + 1250 நிலை 15ஆரம்ப சம்பளம் ரூ. 13,200/- | 01 | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நைவேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயார் செய்திருக்க வேண்டும்.சைவ திருக்கோயில் பூசை முறை பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 18 வயது முழுமையடைந்தவராகவும், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy