கோவை மாவட்டம், போரூர் வட்டம் , போரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 28/06/2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதர விவரங்களை அலுவலக நாட்களில் வந்து அலுவலக நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர்
பணியிடம் எண்ணிக்கை
சம்பள விகிதம்
தகுதி
வழக்கு எழுத்தர்
01
Level 22
18500-58600
10 வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
சீட்டு விற்பனை எழுத்தர்
01
Level 22
18500-58600
10 வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
காவலர்
01
Level 17
10000-31500
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்
03
Level 10
10000-31500
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பு
01
Level 10
10000-31500
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர் (தொகுப்பூதியம்)
03
தொகுப்பூதியம் ரூ.6000/-
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
திருமஞ்சனம்
02
Level 17
10000-31500
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமங்களுக்கு அல்லது வேத பாட சாலையில் தொடர்ந்து ஓராண்டு படித்திருக்க வேண்டும். மேற்கண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவி யானைப் பாகன்
01
Level 11600-36800
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.யானைக்கு பயிற்சி அளித்து கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மொத்தம்
13
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு நிபந்தனைகள்
இந்துமதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள் பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள்
அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 28.06.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும்.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை
விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் ரூ.100 செலுத்தி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலக நேரத்தில் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உதவி ஆணையர்/செயல் அலுவலர்
போரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641010.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.