அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலும் மற்றும் திருக்கோயில் இணையதள பக்கத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
பணியிடத்தின் பெயர் | ஒப்பந்த ஊதியம் (மாதம் ஒன்றுக்கு ) | காலியிடம் | கல்வித் தகுதி |
மன நல மருத்துவர் | ரூ.20,000 | 01 | degree in bachelor of medicine and bachelor of surgery with diploma in psychiatric medicine |
மருத்துவ அலுவலர் | ரூ.25,000 | 01 | degree in bachelor of medicine and bachelor of surgery (M.B.B.S) |
செவிலியர் | ரூ.18,000 | 02(ஆண் - 1பெண் - 1) | auxiliary nurse and wife certificate (or )general nurse & mid wife certificate or diploma in nursing |
இல்ல காப்பாளர் | ரூ.25,000 (நபர் ஒருவருக்கு ) | 01 | degree in master of social welfare |
சமூக பணியாளர் | ரூ.18,000 | 02(ஆண் - 1பெண் - 1 ) | degree in bachelor of social welfare |
பராமரிப்பு உதவியாளர் | ரூ.10,000 (நபர் ஒருவருக்கு ) | 04(ஆண் - 02பெண் - 02) | Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
தொழிற் பயிற்சியாளர் | ரூ.12,000 | 01 (பெண் - 1 ) | Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
பாதுகாவலர் | ரூ.9,000 | 02 (ஆண் - 2) | 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1IVjA0Q5KISOTkMzc2brflk6t5kNPc7Gi/view
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://hrce.tn.gov.in/hrcehome/index.php
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு நிபந்தனைகள் :
இந்துமதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள் பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள்
அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 06.06.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும்.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை
விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy