ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் வேலை

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் வேலை

காட்சிப்படம்

காட்சிப்படம்

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copies only ) பெற்று அனுப்பப்பட வேண்டும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஓட்டுநர், தபேதார், மின் பணியாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வெளியிட்டுள்ளது.

  எந்தவித எழுத்துத் தேர்வுமில்லாமல்  நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  பணியிடங்கள் விவரம்:

  ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copies only ) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்தகுதி
  ஓட்டுநர்1ரூ.18,500-58600/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
  தபேதார்1ரூ.15,900-50,400/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி
  உதவி மின் பணியாளர்1ரூ.16,600-52,400/-எலக்ரிகல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு.
  வேதபாராணம்1ரூ.15,700-50,000/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  காவலர்2ரூ.15,900-50,400/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  உதவி சுயம்பாகம்2ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  உதவி பரிச்சாரகம்1ரூ.10,000-31500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  சமையலர்1ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும்.
  சமையல் உதவியாளர்1ரூ.6,900-21,500/-எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  துப்புரவாளர்1ரூ.4,200-12,900/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

  பொது நிபந்தனைகள்:

  தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும்   இருத்தல் வேண்டும்.

  01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும்  விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பங்களை hrce.tn.gov.in மற்றும்  என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட் இதோ

  டிசம்பர் 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடனும் ஆஜராக வேண்டும். எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறையில் வரிசை எண் மற்றும் உரிய சான்றுகளுடன், அஞ்சல் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு "உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருவொற்றியூர், சென்னை -19 " என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

  இதையும் வாசிக்க: தொழில் தொடங்க ரூ. 75 லட்சம் வரை மானியம்... படித்த இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு

  நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

  நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள். குற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள், ஜாமீனில் கட்டுப்படுத்தப்பட்டவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள். திருக்கோயில் குத்தகைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள், தீர்ப்புக் கடனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

  தமிழ்நாடு - இந்து சமய அறநிலையத் துறை விளம்பர அறிவிப்பு

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment