அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிட எண்ணிக்கை | ஊதிய விகிதம் | கல்வி மற்றும் இதர தகுதிகள் விபரம் |
உதவி சுயம்பாகம்( உள்துறை) | 02 | ரூ. 10000 to ரூ.31500/- | தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.இத்திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின் படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
இளநிலை உதவியாளர் (வெளித் துறை) | 01 | ரூ.18500 to ரூ. 58600/- | SSLC அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். |
தட்டச்சர் (வெளித் துறை) | 01 | ரூ.18500 to ரூ.58600/- | SSLC அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்க்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.அரசு தொழில் நுட்ப தேர்வுகளில் 1. தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் , இரண்டிலும் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலை ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது தமிழில் கீழ்நிலை , ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசால் அங்கீகரிக்கப்பட்ட Computer application and office automation அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை) | 01 | ரூ. 11600 to ரூ.36800/- | தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
நிபந்தனைகள் :
விண்ணப்பத்தாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை https://hrce.tn.gov.in//hrcehome/index.php ஆகிய இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் மட்டும் தகுதிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் 637001 என்ற முகவரிக்கு 21.01.2022 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வண்ணம் அனுப்புதல் வேண்டும்.
இப்பணியிடங்கள் அரசாணை எண்.114 சுற்றுலா , பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள் 03.09.2020ல் ஏற்படுத்தப்பட்ட விதிகளை பின்பற்றி நிரப்பப்படும்.
அறநிறுவனங்கள் , அரசுத் துறை , உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து பணி நீக்கம் அல்லது விளக்கம் செய்யப்பட்டவர்கள் , திருக்கோயில்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
பணி நியமனம் இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகும்.
இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி
https://hrce.tn.gov.in//hrcehome/index.php
இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/4887/411/document_1.pdf
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy