காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய 28.01.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பணியிடம்
தொகுப்பூதியம் (மாதம் ஒன்றுக்கு )
பணியிட எண்ணிக்கை
தலைமை ஆசிரியர்
ரூ.35,000/-
01
ஆகம ஆசிரியர்
ரூ.30,000/-
01
எழுத்தர்
ரூ.10,000/-
01
சமையல்
ரூ.12,000/-
01
சமையல் உதவியாளர்
ரூ.10,000/-
01
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். செயல் அலுவலர் , அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில், ஸ்ரீ பெரும்புதூர் - 602 105, காஞ்சிபுரம் மாவட்டம், விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி , வயது வரம்பு , நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.