ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட உள்ள முதலுதவி மருத்துவ மையத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (On Contract) Basis) நியமனம் செய்வதற்காக கீழ்க்கண்ட விபரப்படியான புதிய பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து மட்டும் 06.07.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் |
வயது (அதிகபட்ச) வயது வரம்பு 01.06.2022 அன்று |
பணி இடங்களின் எண்ணிக்கை |
ஒப்பந்த ஊதியம் |
தகுதி |
மருத்துவ அலுவலர் (Medical Officer) |
35 வயது |
2 |
ரூ.60,000/- |
Mbbs (Qualified Register Under TNMSE |
செவிலியர் |
35 வயது |
2 |
ரூ.14,000/- |
Staff Nurse /MLHP DGNM (Diploma in general nursing and midwives ) |
(Multi Purpose Hospital
Worker/ Attender) |
40 வயது |
2 |
ரூ.6,000 |
8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
விண்ணப்பங்களை இலவசமாக நேரிலோ அல்லது
http://hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் பெயரில் உள்ள இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம். 638401.
3. இதர நிபந்தனைகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
1. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
2. தொற்றுநோய், உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
3. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி புகைப்படத்தின் மீது அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்றிருக்கவேண்டும்.
4. (1) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள் (ii) பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப் பட்டவர்கள் (II) அரசுப் பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
5.நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
6. 01.06.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
7. 06.07.2022ம்தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
8. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள், அனுபவ சான்று மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
9. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
10.வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
11.நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
12. விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
13. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது
14. ராஜரீகத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
15. விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது www.tnhrce.gov.in என்கிற இணையதள முகவரியில் பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
16. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம். 638401. தொலைபேசி எண். 04295-243289
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.