• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.10.2021 மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  • Share this:
    திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் விவரப்படியான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.10.2021 மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்
    வேலையின் பெயர் இளநிலை உதவியாளர் ,ஓட்டுநர் , கடைநிலை ஊழியர் , உதவி மின்பணியாளர் , அம்மன் மடப்பள்ளி , பரிசாரகர் , பெருமாள் கோயில் மடப்பள்ளி, குழாய் பாராமரிப்பாளர் , தமிழ்ப்புலவர், அர்ச்சகர், பரிசாரகர் , இரவு காவலர்,
    காலிப்பணி இடங்கள் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பணியிடம் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
    வயது வரம்பு 01.09.2021 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18/10/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22/10/2021 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும் படி விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கல்வி தகுதி

    ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    8, 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், ஒயர்மேன், எலக்ட்ரிக்கல், பிளம்பர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், தமிழ்த்துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இந்து சமயப் பாடசாலையில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், தமிழில் நன்றாகப் படிக்க, எழுதத் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
     விண்ணப்ப முறை   Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி

    இணை ஆணையர், செயல் அலுவலர், அருமிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை - 600077

     
    விண்ணப்ப கட்டணம் No fees

    வேலைவாய்ப்பு நிபந்தனைகள்‌:

    • இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து 22/10/2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

    • தொற்றுநோய்‌ உடல்‌ அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்‌.

    • நீதிமன்றத்தில்‌ தண்டனை அடைந்தவர்கள்‌ பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள்‌ என நீதிமன்றத்தில்‌ தீர்மானிக்கப்பட்டவர்கள்‌

    • அரசுப்பணிகள்‌, பொது ஸ்தாபனங்கள்‌ மற்றும்‌ வேறு இடங்களில்‌ பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம்‌ செய்யப்பட்டவர்கள்‌. ஆகியோர்கள்‌ மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத்‌ தகுதியற்றவர்கள்‌.

    • நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்‌. இதற்கு அரசிதழ்‌ பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச்‌ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌.

    • அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    • விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

    • விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    • வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும்.

    • நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை

    • விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

    • விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

    • விண்ணப்பங்களுக்கு கட்டணம்‌ கிடையாது.

    • விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in/ என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள பக்கத்தில்‌ விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

    • அதற்கு பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில்‌ அலுவலக நாட்களில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌ மற்றும்‌ திருக்கோயில்‌ இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.


    அறிவிப்பு விவரம்


    அறிவிப்பு விவரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: