• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உடையவர்கள் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர் போன்ற 23 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன. நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை ( TNHRCE)
    வேலையின் பெயர் அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர், பரிசாரகர், தமிழ்ப்புலவர், அம்மன் படப்பள்ளி மற்றும் பல பணிகள்
    காலிப்பணி இடங்கள் 23 காலிப்பணியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    வயது 01.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2021
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    இணையதள முகவரி www.hrce.tn.gov.in

     

    அறிவிப்பு விவரம்


     

    திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் வேலைக்கான கல்வித் தகுதி விவரம் :



























    இளநிலை உதவியாளர் 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
    ஜாடுமாலி, தோட்டி, முடிகொட்டகை மேஸ்திரி, இரவு காவலர் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.
    டிரைவர் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.
    உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    குழாய் பராமரிப்பாளர் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    ஒத்து & தாளம் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.

    விருப்பம் உடையவர்கள் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    நேர்காணல் நடைபெறும் இடம் முகவரி :
    இணை ஆணையர், செயல் அலுவலர், அருமிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை - 600077

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: