Home /News /employment /

இந்து அறநிலையத் துறையில் வேலை: தமிழில் புலமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்து அறநிலையத் துறையில் வேலை: தமிழில் புலமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாதிரி படம்

மாதிரி படம்

விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இந்து அறநிலையத்துறை இணையத்தளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்து சமயம் சார்ந்த ஆகமம் மற்றும் ஆன்மீக நூல்களை மொழிபெயர்ப்பு செய்திட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணியிடங்கள்:    

    தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் - 3

    ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர்கள் - 2

    தகுதிகள்:   

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்று 65 வயதிற்குட்பட்ட ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்.

    தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்வதற்குரிய மொழியறிவுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    மாதாந்திர மதிப்பூதியம் ரூ.40,000

    இந்து ஆன்மீக புத்தக வெளியீட்டுப் பிரிவில்  விருப்பத்தை தெரிவிப்பதற்கான அழைப்பு: (inviting Expression of interest of EOI Empanelment of Hindu spiritual Books Publication)

    தெலுங்கு - தகுதி : எம்.ஏ., பி.எச்.டி.,

    சமஸ்கிருதம் - சம்ஸ்கிருத சிரோண்மணி/ முதுகலை

    ஆகமம் மற்றும் சுவடி நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கு தேவையான மொழியறிவுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    மதிப்பூதியம்: மொழிபெயர்க்கப்படும் நூலின் பக்கங்களுக்கு ஏற்றவாறு சன்மானம் வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.6.2022

    அனுப்ப வேண்டிய முகவரி:

    ஆணையர்,

    இந்து சமய அறநிலையத்துறை,

    119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம்

    சென்னை - 600 004.

    விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இந்து அறநிலையத்துறை இணையத்தளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Jobs, TN Govt

    அடுத்த செய்தி