Home /News /employment /

14 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறத் தொடங்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்

14 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறத் தொடங்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்துக்களில் அனைத்து சாதியினரையும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வழிகோலும் அரசாணையை தமிழக அரசு கடந்த 2006ம் ஆண்டு வெளியிட்டது

    தமிழகத்தில்,  14 ஆண்டுகளுக்குபி பிறகு  அர்ச்சகப்  பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை இந்து சமய அறநிலைய துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 200 ஆக இருக்கும் என்றும் இதற்கான வயது வரம்பு 14  முதல் 24 வயது எனவும் கூறப்படுகிறது.

    முன்னதாக, கடந்த 2006ம் ஆண்டு  தமிழகத்தில் உள்ள இந்து திருக்கோயில்களில் உரிய தகுதிகள் மற்றும் பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில் அனைத்து சாதியினரையும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வழிகோலும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 2002ம் ஆண்டு உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், சாதி பாகுபாடின்றி அர்ச்சகர்கள் நியமிப்பதற்கு சட்ட ரீதீயாகவே அல்லது அரசியல் சட்ட ரீதியாகவோ எவ்வித தடையுமில்லை என்ற அரசு தலைமை  வழக்கறிஞர் கருத்தின் அடிப்படையிலும் இந்த  முடிவை தமிழக அரசு எடுத்தது.

    இந்த அரசாணையை சிறப்பாக செயல்படுத்துவதற்கு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அர்ச்சகர் பயிற்சிக்கான பாடத்திட்டம், பயிற்சியாளர்க்கான அடிப்படைக் கல்வித் தகுதி, வயது, பயிற்சிக்கான வரையறை, பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை தொடர்பாக இந்த குழு அரசுக்கு பரிந்துரை அளித்தது.

    இதையும் வாசிக்க:  வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் இங்கே

    இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2007ம் ஆண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் ஆகிய ஆறு திருக்கோயில்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 240 மாணவர்கள் இந்த பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர். எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு உள்ளிட்ட பல சோதனைகளுக்குப்  பிறகு  206 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இருப்பினும், 2008ல்  ஏற்பட்ட சட்ட போராட்டம் காரணமாக  இந்த பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.  இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம், " அனைத்து சாதியினரையும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வழிகோலும் அரசாணை அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயலாக கருத முடியாது. இருப்பினும், ஆகம விதிகளின் படி இந்த நியமனங்கள் இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.

    இதையும் வாசிக்க:  இந்திய ராணுவத்தில் 65 காலியிடங்கள்: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    இந்நினையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் துவங்க முடிவெடுத்தது. கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, 56 நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார். இதில் 24 பயனாளிகள் ஆறு திருக்கோயில்களில் நடத்தப்படும் அர்ச்சகர்  பயிற்சிப் பள்ளியில் பயின்ற இதர சாதியைச் சேர்ந்த நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி , பழநி தண்டாயுதபாணி , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் , ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ஆகிய நான்கு திருக்கோயில்களில்  பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த இரண்டு திருக்கோயில்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Recruitment

    அடுத்த செய்தி