தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் 2021-20222 நேரடி நெல்கொள்முதல் பணிக்காக பருவகால பணியாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு 15.11.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் 2021-20222 நேரடி நெல்கொள்முதல் பணிக்காக பருவகால பணியாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களிடம் இருந்து 15.11.2021 வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு நேரடி பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள்உயர்த்தி ஆணையிட்டுள்ளதால் 01.07.2021 அன்று தகுதியுடைய நாளாக கணக்கில் கொண்டு கீழ்கண்டவாறு கல்வித் தகுதி மற்றும் திருத்தியமைக்கப்பட்ட வயது வரம்பிற்குட்பட்ட விழுப்புரம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியுடைய ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
TNCSC
வேலையின் பெயர்
Record Clerk, Security/ Watchman
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
156 காலிப்பணி இடங்கள்
Record Clerk
78 பணியிடங்கள்
Security/ Watchman
78 பணியிடங்கள்
வயது விவரம்
01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
கல்வித்தகுதி
பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk)
ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால காவலர் (Security/ Watchman)
அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். (8th Pass)
சம்பள விவரம்
பருவகால பட்டியல் எழுத்தர்
ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
பருவகால காவலர்
ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
30.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.11.2021
விண்ணப்ப முறை
ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மண்டல மேலாளர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
மண்டல அலுவலகம்,
01 ஹாஸ்பிட்டல் ரோடு,
விழுப்புரம் – 605602.
மேற்கண்ட கல்வித் தகுதியுடைய மனுதாரர்கள் மட்டும் உரிய சான்றுகளுடன் 15.11.2021க்குள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம் , ஹாஸ்பிடல் ரோடு , விழுப்புரம் - 605 602 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. 15.11.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.