ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு - தஞ்சாவூரைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு - தஞ்சாவூரைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

TNCSC Recruitment 2022 | விண்ணப்பங்கள் 08/07/2022 அன்று மாலை 05 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் விண்ணப்பதாரரிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான அறிவிப்பு இந்த மாதம் 20/06/2022ம் தேதி வெளியானது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அடுத்த மாதம் (08/07/2022) மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

கல்வித் தகுதிபருவகால பட்டியல் எழுத்தர் இளங்கலை அறிவியல் /வேளாண்மை மற்றும் பொறியியல்பருவகால உதவுபவர் (+2தேர்ச்சி)பருவகால காவலர் (8ம் வகுப்பு தேர்ச்சி)
வயது வரம்பு 01/07/2022
SC/ST/SC(a)MBC/BC/BC(m)OC
373432

SC/ST/SC(a)MBC/BC/BC(m)OC
373432

SC/ST/SC(a)MBC/BC/BC(m)OC
373432

சம்பளம்

ரூ.5,285 + ரூ.3,499/- ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ.120/-

ரூ.5,218 + ரூ.3,499/- ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ.100/-

ரூ.5,285 + ரூ.3,499/- ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ.100/-

தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகலுடன் முதுநிலை மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண் : 1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு , தஞ்சாவூர் - 613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 08/07/2022 அன்று மாலை 05 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

First published:

Tags: Job Vacancy