'சாப்ட்வேர் மோகம்' மத்திய அரசின் வேலைவாய்ப்பை தவிர்க்கும் தமிழக இளைஞர்கள்! - கல்வி ஆர்வலர்கள்

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எதை படிக்கிறார்களோ, அதையே படித்தால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெறலாம்.

'சாப்ட்வேர் மோகம்' மத்திய அரசின் வேலைவாய்ப்பை தவிர்க்கும் தமிழக இளைஞர்கள்! - கல்வி ஆர்வலர்கள்
  • News18 Tamil
  • Last Updated: November 23, 2019, 11:58 AM IST
  • Share this:
மத்திய அரசு பணிகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டாததால், நமது வேலைவாய்ப்புகளை வட இந்திய இளைஞர்கள் பெரும் நிலை உள்ளது.

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிபிஐ, வருமான வரித்துறை, மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. நான்கு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வுகளில் முன்பு தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெற்று, மத்திய அரசு பணிகளில் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எஸ்.சி. தேர்வுகளில் போட்டியிடும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

சாஃப்ட்வேர் தொடர்பான பணிகளின் மீதான தமிழக இளைஞர்களின் மோகமே இதற்கு காரணம் என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பணிகள் கிடைக்காத போதுதான், அரசுப் பணிகளை இளைஞர்கள் நாடுவதாகவும் கூறுகின்றனர்.


மேலும், முன்பு குறிப்பிட்ட மண்டலத்தில் உள்ள மத்திய அரசு பணிகளுக்கு, அந்தந்த மண்டலங்களைச் சேர்ந்தவர்களே விண்ணப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது இந்த நிலை மாற்றப்பட்டதால், உத்தரப்பிரதேசம், பீகாரைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் வெற்றிபெறுவதாக கூறுகிறார் வருமான வரித்துறை முன்னாள் இணை ஆணையர் சரவணக் குமரன்.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எதை படிக்கிறார்களோ, அதையே படித்தால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெறலாம் எனக் கூறும், எஸ்.எஸ்.சி. வழிகாட்டியாளர் மனோஜ், தமிழக இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என தெரிவிக்கிறார்.

நாள்தோறும் 7-8 மணி நேரம் இதற்காக படிப்பது மிகவும் அவசியம். காலையில் அன்றாட நிகழ்வுகளை படிக்கத் தொடங்கி, அதன்பிறகு பாடத்திற்கு செல்ல வேண்டும். அப்போதுதான் எதை படிக்க வேண்டும், எதை படிக்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் எல்லாவற்றையும் படிக்கத் தேவையில்லை. அப்படி படித்தால் மிகவும் எளிது.இந்த ஆண்டுக்கு எஸ்.எஸ்.சி. நடத்தும் CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் நவம்பர் 25ஆம் தேதி என்பதால், www.sscsr.gov.in என்ற இணையதளத்தில் இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தும் பயிற்சியாளர்கள், தேர்வு நடக்க 3 மாதங்கள் இருப்பதால், எளிதாக பயிற்சி எடுத்து வெற்றிபெறலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
First published: November 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading