குரூப் டி தேர்வில் 100-க்கு 354 மதிப்பெண்கள் - முறைகேடு புகாருக்கு ரயில்வே விளக்கம்

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்க முடியும் என்கிற கேள்வியினை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.

Web Desk | news18
Updated: March 7, 2019, 11:10 AM IST
குரூப் டி தேர்வில் 100-க்கு 354 மதிப்பெண்கள் - முறைகேடு புகாருக்கு ரயில்வே விளக்கம்
தேர்வு எழுதும் மாணவர்கள்
Web Desk | news18
Updated: March 7, 2019, 11:10 AM IST
நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதே சாதனை என நினைத்திருப்போம். ஆனால் ரயில்வேயின் சென்னை மண்டலத்திற்கு நடந்த தேர்வில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் நூற்றுக்கு 354 மதிப்பெண்கள் கூட எடுத்துள்ளனர். ஆனால் இந்த நடைமுறை வழக்கமானதுதான் என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் ரயில்வே துறையில் மொத்தம் 62, 907 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு குரூப் டி பிரிவில் எழுத்து தேர்வு நடைபெற்றது.

செப்டம்பர் மாதம் 17-ம் தேதி முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை சென்னை உள்பட 16 மண்டலங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


சென்னை மண்டலத்தில் 1,550 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு கணினி மூலமாக நடைபெற்ற எழுத்து தேர்வின் முடிவுகள் மார்ச் 4-ம் தேதி வெளியானபோது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

இத்தேர்வில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றது மட்டும் அதிர்ச்சிக்கு காரணமல்ல. 100 மதிப்பெண்ணுக்கு 102, 354 என நினைத்துப் பார்க்க முடியாத மதிப்பெண்களைப் பெற்றுள்ளதால் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள்.

தமிழக வரலாறு, கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் குறித்த கேள்விகளே சென்னை மண்டலத்தில் நடத்தப்படும் தேர்வில் அதிகம் இடம்பெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் தேர்வெழுதிய வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்க முடியும் என்கிற கேள்வியினை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.

Loading...

இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள தமிழக தேர்வர்கள், நேர்மையான முறையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ரயில்வே அமைச்சகத்தின் விளக்கம்:

இதனிடையே குரூப் - டி தேர்வில் நூறு மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு அதற்கு அதிகமாக மதிப்பெண் அளிக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நார்மலிசேசன் முறைப்படி மதிப்பெண் கணக்கிடப்படுவதால் அதிகபட்சம் 126 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் என்றும், அதை முறைகேடாக கருத வேண்டாம் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு வினாத்தாள்களைக் கொண்டு தேர்வு நடப்பதால், கடினமான மற்றும் எளிதான வினாத்தாள்களிடையே உள்ள வேறுபாட்டை நீக்கவே நார்மலிசேசன் முறை கடைபிடிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் சரியான விடைக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும் ரயில்வே கூறியுள்ளது.

19 வருடங்களாக இதேமுறையை பின்பற்றி வருவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

Also see... தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டதா தேமுதிக?
First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...