Home /News /employment /

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியிடம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியிடம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கீழ்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 























    குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சார்ந்த (Child Protection Officer - institutional Care )

    (10+2+3 முறையில்) சமூகப் பணி/சமூகவியல்/குழந்தை வளர்ச்சி(மேம்பாடு)/பொது நிர்வாகத்தில் மனித உரிமைகள்/உளவியல்/மனநல மருத்துவம்/சட்டப்படிப்பு/பொது சுகாதாரம்/சமூகவள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

    (அல்லது )

    (10+2+3 முறையில்) சமூகப் பணி/சமூகவியல்/குழந்தை வளர்ச்சி(மேம்பாடு)/பொது நிர்வாகத்தில் மனித உரிமைகள்/உளவியல்/மனநல மருத்துவம்/சட்டப்படிப்பு/பொது சுகாதாரம்/சமூகவள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தலோடு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த / சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் , திட்ட உருவாக்கம் செயல்படுத்துதல் , கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகிய பணித் திறன்களில் 2 வருடங்கள் பணியாற்றி இருத்தல் வேண்டும்.


    1.கணிணித் தேர்ச்சி அவசியம்

    2.  40 வயது மிகாமலிருத்தல் வேண்டும்.(பொது பிரிவினர்) ஆ)62 வயது மிகாமலிருத்தல் வேண்டும் (அரசுத் துறையில் Group-B மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்)
    குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சார்ந்த (Child Protection Officer - Non institutional Care )

    (10+2+3 முறையில்) சமூகப் பணி/சமூகவியல்/குழந்தை வளர்ச்சி(மேம்பாடு)/பொது நிர்வாகத்தில் மனித உரிமைகள்/உளவியல்/மனநல மருத்துவம்/சட்டப்படிப்பு/பொது சுகாதாரம்/சமூகவள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

    (அல்லது )

    (10+2+3 முறையில்) சமூகப் பணி/சமூகவியல்/குழந்தை வளர்ச்சி(மேம்பாடு)/பொது நிர்வாகத்தில் மனித உரிமைகள்/உளவியல்/மனநல மருத்துவம்/சட்டப்படிப்பு/பொது சுகாதாரம்/சமூகவள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தலோடு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த / சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் , திட்ட உருவாக்கம் செயல்படுத்துதல் , கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகிய பணித் திறன்களில் 2 வருடங்கள் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
    கணினித் தேர்ச்சி அவசியம். பொதுப்பிரிவினர் 40 வயது மிகாமல் இருத்தல் வேண்டும். அரசுத் துறையில் Group B மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்
    சமூகப் பணியாளர் (Social Worker பெண் பணியாளர் மட்டும் )(10+2+3 முறையில்) சமூகப் பணி/சமூகவியல்/சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.பணி முன் அனுபவம் அவசியம்.கணினித் தேர்ச்சி அவசியம்.40 வயது மிகாமல் இருத்தல் வேண்டும். (பொதுப் பிரிவினர்)
    ஆற்றுப்படுத்துனர் (CounSellor)(10+2+3 முறையில்) சமூகப் பணி/உளவியல்/சுகாதாரம் / மன நல ஆலோசனை ஆகிய ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.பணி முன் அனுபவம் அவசியம்.கணினித் தேர்ச்சி அவசியம்.40 வயது மிகாமல் இருத்தல் வேண்டும். (பொதுப் பிரிவினர்)

    மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது.

    மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 20.09.2022 தேதி மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்களை புகைப்படத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்:633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர், என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும்.

    மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண்.0421 2971198-க்கு தொடர்பு கொள்ளவும். மேலும் இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியான www.tirupur.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி