Home /News /employment /

தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வர்கள் தடுத்து நிறுத்தம்: சு.வெங்கடேசன் பெருமிதம்

தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வர்கள் தடுத்து நிறுத்தம்: சு.வெங்கடேசன் பெருமிதம்

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

இந்த தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும்  கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரப் பிரதேசம் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் நியமிக்க எடுத்த முடிவு வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டாதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை ஆர் ஆர் பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டுவிட்டு கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நியமிக்க எடுத்த முடிவு எனது தலையீட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு, தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 17 பேருக்கு முதலில் வேலை அளிக்கப்பட்டது. இப்போது மீதி 39 பேருக்கு வேலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் காத்திருப்போர் பட்டியளில் உள்ள அனைத்து சென்னை ஆர்ஆர்பி தேவர்களும் வேலை பெறுகிறார்கள்.

    இதையும் வாசிக்கதற்காலிக ஆசிரியர் பணி நியமனம் பள்ளிகல்வித் துறையில் பின்னடைவை ஏற்படுத்தும் - சீமான்

    இதன் மூலம் இனி சம்மந்தப்பட்ட ரயில்வேயைச்  சேர்ந்தவர்களை விட்டுவிட்டு வேறு ரயில்வே தேர்வர்களை நியமிக்கும் பழக்கம் எதிர்காலத்தில் கைவிடப்படும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இத்துடன் மெரிட்டில் தேர்வாகி மருத்துவ தகுதி மறு ஆய்வில் தகுதி பெற்ற ஐந்து பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது.  காத்திருப்போர் பட்டியல்  தேர்வர்களின் பட்டியல் 2 ஆண்டுகளைத் தாண்டி விட்டதால் அவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை வைக்கப்படும் என்று தெரிகிறது. இதனை, தாராள மனப்பன்மையுடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

    இதையும் வாசிக்கSSC Multi Tasking Examination: ஜுலை 5ம் தேதி முதல் எஸ்எஸ்சி தேர்வு

    இந்த தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும்  கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

    வேலையில் சேர இருக்கிற காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக, தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து கோரக்பூர் ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என்றும் ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Southern railway, Su venkatesan

    அடுத்த செய்தி