வேலூர்,
மதுரை,
திருப்பூர்,
திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிய்டங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி |
சம்பளம் |
தகுதி |
அலுவலக உதவியாளர் |
15,000 - 50,000
Level I |
8-ம் வகுப்பு தேர்ச்சி |
ஓட்டுநர் |
19500 - 62000
Level 8 |
8-ம் வகுப்பு தேர்ச்சி
UMV License with Batch
நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் |
இரவு காவலர் |
15,700 - 50,000
Level 1 |
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராகவும் நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும் ) |
மேற்குறிய, தகுதியுள்ள
இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் 22.04.2022 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பத்தினை சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி, (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்).
2 எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றதற்கான கல்வி சான்று நகல்.
3) ஓட்டுநர் உரிமம்
4) பள்ளி மாற்று சான்று நகல்.
5) சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது).
6) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண். பதிவு சான்றின் நகல்.
7) குடும்ப அடையான அட்டை நகல்.
8) முன்னுரிமைக்கான சான்றின் நகல் (Priority Certificate).
9) இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்.
10) சுயவிலாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உரை-1.
இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு என் கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும், விண்ணப்பகவரில் அலுவலக உதவியாளர் / இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டும் அனுப்ப வேண்டும்.
தேர்வுமுறை: தகுதியுள்ள தேர்வர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள்
ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது. மாவாட்டம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பை பார்த்துத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பு:- விண்ணப்ப படிவம் TNHRCE website-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அலுவலக வேலை நேரத்தில் இவ்வலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.