ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பழனி திருக்கோயிலில் வேலை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பழனி திருக்கோயிலில் வேலை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பழனி திருக்கோயிலில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பழனி தண்டபாணி சுவாமி திருக்கோயிலில் மனநல மருத்துவர், மருத்துவ அலுவலர், செவிலியர், தொழிற் பயிற்சியாளர்  உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

  காலிப்பணியிடங்கள்: 14

  விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

  விபரம்: 

  நிபந்தனைகள்: 

  விண்ணப்பதார் இந்து மதத்தை சார்ந்தவராகவும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கவேண்டும்.

  விண்ணப்பதார் மே 2022ம் மாதம்  முதல் தேதியன்று 35 வயதுக்குட்பட்டவராக இருக்க  வேண்டும்.

  விண்ணப்பதார் உடல் ஆரோக்கியம் உடையவராக இருக்க வேண்டும்.

  இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

  இப்பணியானது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் என்பதால் இப்பணியினை மேற்கோள்காட்டி இத்திருக்கோயில் பணி நியமனங்களில் எவ்வித முன்னுரிமையும் கோரக்கூடாது.

  பணியாணை பெறப்பட்ட நபர் ரூ.100/-க்கான ஒப்பந்தப்பத்திரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு பணி ஏற்பு செய்ய வேண்டும்.

  நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசு பணியில் இருந்தும், பொது ஸ்தாபணத்தில் இருந்தும், இதர திருக்கோயில்களிலிருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இத்திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க  தகுதியற்றவர்கள்.

  விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்குத் தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazelled Officer) பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும்,  06.06.2022 தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.

  விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

  விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

  வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

  நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்ட உடாது

  நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க   திருக்கோயில் நிவோகத்திற்கு உரிமை உண்டு

  தேர்வு செய்யப்படும் நபருக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரின் அங்கீகாரத்திற்கு பின்பே பணி ஆணை வழங்கப்படும்.

  விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அணைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்  (gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

  விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.

  விண்ணப்படிவத்தில் விண்ணப்பதார்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்  மேலொப்பம் பெறப்பட வேண்டும்

  விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை இத்திருக்கோவில் அலுவலகத்தில் நேரிலும், https://palanimurugan.hrce.tn.gov.in/, https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற திருக்கோயில் இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

  Published by:Salanraj R
  First published:

  Tags: Hindu Endorsements Dept, Jobs