Job Alert : ரூ.375 தினசரி சம்பளம் ... தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இதுதொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.

  • Share this:
    தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் யோகா மற்றும் நேச்சுரோபதி பிரிவுகளில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் ஆண்/ பெண் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25.08.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 











































    பணி

    Therapeutic Assistant(Male) சிகிச்சை உதவியாளர் (ஆண்)

    Therapeutic Assistant(Female) சிகிச்சை உதவியாளர் (பெண்)


     

    காலியிடங்கள்


    Therapeutic Assistant(Male) சிகிச்சை உதவியாளர் (ஆண்) - 53

    Therapeutic Assistant(Female) சிகிச்சை உதவியாளர் (பெண்) - 82


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    12.08.2021
    சம்பள விவரம் தினமும் ரூ.375 வழங்கப்படும். வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


     

    கல்வி தகுதி
    நர்சிங் தெரபி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். (Diploma in Nursing Therapy )
    வயது 18 முதல் 57க்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை

    நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இதுதொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.


     

    விண்ணப்பிக்கும் முறை
    www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


     

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
    Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 25.08.2021 மாலை 5 மணி

    மேலும் விவரங்கள் அறிய www.tnhealth.tn.gov.in
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

    • வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 25.08.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேருமாறு விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

    • தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் தாமதமாக வருவதற்கு அலுவலகம் பொறுப்பேற்காது

    • விண்ணப்பதாரர்கள் வேறு ஒருவரின் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணை குறிப்பிடக் கூடாது. விண்ணப்பிக்கும் முன் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண் இல்லை எனில் தனியாக உருவாக்கி அதனை பராமரிக்க வேண்டும்.

    • விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும். இடங்கள் மற்றும் அவர்களின் விண்ணப்பத்தில் நிரப்பப்பட்ட ஒவ்வொன்றையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • விண்ணப்பதாரரரின் பெயர் அல்லது அவரது தந்தை /கணவரின் பெயர் போன்றவை இருக்க வேண்டும். சான்றிதழில் உள்ளபடி விண்ணப்பத்தில் சரியாக வழங்கப்பட வேண்டும். ஏதேனும் மாற்றம் இருந்தால் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யலாம். சான்றிதழில் உள்ளபடி விண்ணப்பத்தில் சரியாக வழங்கிட வேண்டும் .

    • பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இதுதொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: