அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,474 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகள் பலவற்றில் முதுநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

news18
Updated: October 28, 2018, 9:45 AM IST
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,474 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்
1,474 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி
news18
Updated: October 28, 2018, 9:45 AM IST
தமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகள் பலவற்றில் முதுநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எவ்வளவு பணியிடங்கள்? இந்த வகையில் 1474 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ. 7,500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எந்தெந்த பிரிவுகள்? தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட 11 பாடப்பிரிவுகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

எவ்வாறு விண்ணப்பிப்பது? விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள காலியிட விவரங்களையும், பள்ளிகள் குறித்த விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அங்கேயே விண்ணப்ப படிவங்களையும் சமர்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகவும்.

Also watch

First published: October 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...