தமிழ்நாட்டு அரசின் சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய திட்டத்திற்கு வழக்கு பணியாளர் , ஓட்டுநர் / பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 12.02.2022
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் : மாவட்ட சமூக நல அலுவலகம் , 4வது மாடி , B பிளாக் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , சத்துவாச்சாரி , வேலூர்.
வழக்கு பணியாளர் காலிப்பணியிட விவரம் : 05 காலியிடங்கள்
வழக்கு பணியாளர் தகுதிகள் : பட்டப்படிப்பு பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.
2 வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளர்களாக இருத்தல் அவசியம்
உள்ளூர் விண்ணப்பதாரர்களாக இருத்தல் அவசியம்
பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடம் : 02 காலியிடங்கள்
கல்வித் தகுதி 8 வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி /தோல்வி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
நன்கு சமைக்கத் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் அவசியம் உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்
மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.
ஓட்டுநர் / பாதுகாவலர் காலிப்பணியிடம் : 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி 8 வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி /தோல்வி
மாற்றுத்திறனாளியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்
உள்ளுர் விண்ணப்பத்தாரராகவும் இருத்தல் அவசியம்.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலமாக 12.02.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
அலுவலக முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்
பி, பிளாக் 4வது தளம்
மாவட்ட ஆட்சியரகம்
வேலூர் - 09
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
https://static.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2022/01/2022011979.pdf
இந்த லிங்கில் சென்று காணவும். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.