Home /News /employment /

5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை.. தேர்வு இல்லை - விவரம் இங்கே

5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை.. தேர்வு இல்லை - விவரம் இங்கே

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

TN Govt Jobs 2022 : திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பம் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 24.08.2022-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :























    நிறுவனம்திண்டுக்கல் மேற்கு வட்டம்
    காலியாக உள்ள வேலையின் பெயர்கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    விண்ணப்பிக்க கடைசி தேதி24/08/2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் .
    விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இந்த மாதம் 24ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

    கிராம உதவியாளர் வேலைக்கான தகுதிகள் :

    கல்வித்தகுதி : கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு : (30.06.2022 அன்று) குறைந்த பட்சம் 21ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/32- வயது, SC/ST 37-வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    கிராம உதவியாளர் வேலைக்கான காலியிட விபரம் :

    1.சீலப்பாடி கிராமம்- BC (Other than Backward Class Muslims) Non- Priority – Tamil Medium

    2.தெத்துப்பட்டி கிராமம் – ST – Priority – (Both Men and Woman) – Tamil Medium

    கிராம உதவியாளர் வேலைக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது,

    • பணியிடம் காலியாக உள்ள கிராமம்,

    • 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,

    • இல்லாத நிலையில் குறுவட்ட அளவிலும்,


    குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி