Home /News /employment /

Job Alert : தூத்துக்குடி மாவட்டத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Job Alert : தூத்துக்குடி மாவட்டத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் சூப்பர் வேலை

தூத்துக்குடியில் சூப்பர் வேலை

TN Govt Jobs 2022 : தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தூத்துக்குடியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.08.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.






































    பதவியின் பெயர்வட்டார இயக்க மேலாளர்வட்டார ஒருங்கிணைப்பாளர்
    தொகுப்பூதியம்ரூ.15,000/-ரூ.12,000/-
    வயது  01.07.2022 அன்று18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 2818 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 28
    மொத்த பணியிடங்கள்2















    வட்டாரம்காலிப்பணியிட எண்ணிக்கை
    கருங்குளம்01
    புதூர்01

    33 பணியிடங்கள்







































    வட்டாரம்காலிப்பணியிட எண்ணிக்கை
    கருங்குளம்04
    ஆழ்வார் திருநகரி01
    சாத்தான் குளம்01
    கோவில் பட்டி06
    கயத்தார்06
    ஒட்டப்பிடாரம்06
    விளாத்தி குளம்04
    புதூர்05

     
    கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்

    1. இளங்கலை பட்டம் முடித்தவர் MS Office குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

    2. கணினி மென்பொருள் சார்ந்த கல்வித் தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை.
    1. இளங்கலை பட்டம் முடித்தவர் MS Office குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    முன் அனுபவம்மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
    முகவரிதூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்டவர்.தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்டவர்.

    1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

    2. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    3. தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    4. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதா இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 10.08.2022 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    வட்டார இயக்க மேலாளர்மற்றும் வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான WWW.thoothukudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி