தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
இத்திட்டத்தின் மூலம் (12ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி முதல் தலைமுறை தொழில் முனைவேர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு பொது பிரிவினருக்கு 20க்கு மேல் 35க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர்,ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இத்திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை.
பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25% அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொழில் முனைவோருக்கு கூடுதலாக 10% மானியம் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: கொரோனா பேட்ச்.. பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்கள் 62% பேர் அரியர்.. பெரும்பாலும் கணிதத்தில் பெயில்..
இத்திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, CNC லேத் இயந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் இயந்திரங்கள், பேப்பர் போர்ட், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலை மிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கென் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்/பெண்) , ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் துவங்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.
திட்ட மதிப்பீட்டின் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: Education Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன
இத்திட்டத்தின்கீழ், பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர், 892353806 என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.