ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

கிராம உதவியாளர் பணி

கிராம உதவியாளர் பணி

கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 தேதி வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு  அறிவுறித்தியுள்ளது.

  இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

  இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தேதிகளை (உத்தேசம்) அரசு அறிவித்துள்ளது.  அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

  இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும்.

  இதையும் வாசிக்கஅரசு பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

  இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். தாசில்தார்கள் மூலம், தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள்  உறுதி செய்ய வேண்டும்.

  இதையும் வாசிக்க: இந்தியாவின் பெண்கள் பணியாற்றுவதற்கான சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

  மேலும், எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும், அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு கலெக்டர்கள் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Employment, Job