முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

TN Govt Employees Retirement weightage | விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய வெயிட்டேஜ்க்காண அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு , புதிய வெயிட்டேஜ்க்காண அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது, அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54 க்கு பதிலாக 55 வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால் அதேபோல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

ALSO READ |  Agnipath Recruitment 2022 : இந்திய விமான படையில் பணியாற்ற விருப்பமா? எப்படி விண்ணப்பிப்பது? விவரங்கள் இங்கே

 அதேபோல 57 ஆண்டுகள் வயது ஆகி ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். அதேபோல 59 வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது வரை பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

First published:

Tags: Government, Retirement