ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எஸ்எஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

எஸ்எஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

SSC Exam workshop

SSC Exam workshop

SSC Combined Graduate Level Examination: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், எஸ்எஸ்சி தேர்வர்கள் குறித்த சிறப்பு பயிற்சி முகாமினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நான் முதல்வன்  திட்டட்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் (எஸ்எஸ்சி) குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது.

  முன்னதாக, நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மத்திய துறைகளில் காலியாக உள்ள  20,000-க்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் 8ம் தேதிக்குள் நிறைவடைய இருக்கிறது. 

  இந்நிலையில், எஸ்எஸ்சி தேர்வர்கள் குறித்த சிறப்பு பயிற்சி முகாமினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னையில், உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் 9ம் தேதி (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான பயிற்றுநர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் தேர்வு குறித்த முக்கிய ஆலசோனைகளை வழங்க உள்ளனர். ஆர்வமுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், இணைய வழியிலும், அரசு கேபிள் தொலைக்காட்சியிலும் இந்த பயிற்சி வகுப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட  இருக்கிறது. 

  20,000 காலியிடங்கள்: 

  இத்தேர்விற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

  01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணி.. ரூ.35,000 வரை சம்பளம்.. உங்களுக்கு செட் ஆகுமா?

  தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும், முழுமையான விபரங்களை அறிய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment, SSC