ஆசிரியர் பணிக்கு இனி இரண்டு தேர்வுகள் எழுத வேண்டும் - அரசாணை வெளியீடு

news18
Updated: July 24, 2018, 6:29 PM IST
ஆசிரியர் பணிக்கு இனி இரண்டு தேர்வுகள் எழுத வேண்டும் - அரசாணை வெளியீடு
ஆசிரியர்கள் (கோப்புப் பட,ம்)
news18
Updated: July 24, 2018, 6:29 PM IST
தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்களுக்காக தகுதி தேர்வையும், போட்டித் தேர்வையும் தனித்தனியாக நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் முதலில் தகுதித் தேர்வின் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், பின்னர் தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் +2 மற்றும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கிட்டு வெயிட்டேஜ் முறை பின்பற்றப்பட்டது.

இந்த வெயிட்டேஜ் முறை, சமீபத்தில் படித்து முடிப்பவர்களுக்கு சாதகமாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பல ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநில பொதுப்பள்ளி வாரிய கூட்டத்தில், தகுதித்தேர்வை தனியாகவும், பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வை தனியாகவும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இரு தேர்வுகளையும் தனித்தனியாக நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
First published: July 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...