தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் பணிவாய்ப்பு!

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் பணிவாய்ப்பு!
தமிழக அரசு
  • News18
  • Last Updated: December 10, 2018, 10:48 PM IST
  • Share this:
தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (Office assistant) பிரிவில் காலியாக இருக்கும் 21 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


தேர்வு முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உரிய விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து டிசம்பர் 17-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சென்னையிலுள்ள தொழிலாளர் ஆணைய அலுவலகத்துக்கு சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.labour.tn.gov.in/ என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.Also watch

First published: December 10, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading