கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு - 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு - 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு வேலை
கீழ்காணும் பணியிடத்திற்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 01.02.22 அன்றைய தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்கண்டவாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களுக்கு கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்காணும் பணியிடத்திற்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 01.02.22 அன்றைய தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குமிடிபூண்டி வட்டத்தினை சேர்ந்தவராகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
வருவாய்த் துறை, திருவள்ளூர்
வேலையின் பெயர்
கிராம உதவியாளர்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
08 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
01.01.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
குறைந்தபட்சம் ஐந்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
மாதம் ரூ. 11,100 - ரூ.35,100
விண்ணப்பிக்க கடைசி தேதி
20.01.2022
விண்ணப்ப முறை
tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.