Home /News /employment /

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் க்ளார்க் வேலை- மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் க்ளார்க் வேலை- மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!

TN Government Jobs | தமிழக அரசு வேலைக்கு தகுதியான நபர்களிடமிருந்து 13.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Government Jobs | தமிழக அரசு வேலைக்கு தகுதியான நபர்களிடமிருந்து 13.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Government Jobs | தமிழக அரசு வேலைக்கு தகுதியான நபர்களிடமிருந்து 13.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 13.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



























    பதவியின் பெயர்பதிவுறு எழுத்தர்
    மொத்தப் பணியிடங்கள்01
    கல்வித் தகுதி10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    ஊதியம்ரூ.15,900 - 50,400 என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்
    கடைசிநாள்13/07/2022
    வயது தகுதி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    நிபந்தனைகள் :

    1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைசான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

    2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

    3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. மாற்றுத் திறனாளிகள் வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 வருடம், முன்னாள் ராணுவத்தினர் ( SC/SC(A)/ST/BC) : 55, [Other than SC/SC(A)/ST/BC]:50 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் - 629177 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 13.07.2022 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவேண்டும்.

    பதிவுறு எழுத்தர் காலிப்பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான www.kanniyakumari.nic.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://kanniyakumari.nic.in/ta/notice_category/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    இதே போன்று கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022061684.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி