மயிலாடுதுறை வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் கீழ்கண்ட இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடத்திற்கு கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2021ல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆதிதிராவிடர் , பழங்குடியினர் , மற்றும் ஆதிதிராவிட அருந்ததியினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயதாக 37 வயதும் , மிகவும் பிற்படுத்த பட்டோர் /சீர் மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் /பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் ) ஆகியோருக்கு 34 வயதும் , இதர வகுப்பினருக்கு 32 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம் , கல்வித் தகுதி சான்றுகள் , குடும்ப அட்டை , ஆதார் அட்டை , சாதி சான்றிதழ் , வருமான சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகள்களுடன் , விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட 25-10 செ.மீ அளவுள்ள உரை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபாலிலோ எதிர்வரும் 22.12.2021 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.
அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசின் அடிப்படை பணியாளர் பணியமைப்பு விதிகளின் படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என மயிலாடுதுறை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.