Home /News /employment /

கிராம உதவியாளர் வேலை - 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிராம உதவியாளர் வேலை - 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிராம உதவியாளர் வேலை

கிராம உதவியாளர் வேலை

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப் பட உள்ளது.

    இப்பணியிடத்திற்கு,

    கல்வித் தகுதி : 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழில் பிழையின்றி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 01.07.2021 அன்றைய நிலையில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகியோருக்கு 37 வயதும் , இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சீர்காழி மாவட்டத்தினை சார்ந்தவராகவும் , சீர்காழி வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

    தகுதியும் , விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம் , கல்வித் தகுதி சான்றுகள் , குடும்ப அட்டை , ஆதார் அட்டை , சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ், மற்றும் வேலை வாய்ப்பாக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25*10 செண்டி மீட்டர் அளவுள்ள உரை ஆகியவற்றுடன் விண்ணப்பத்திலோ நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 28.12.2021 மாலை 05.45 மணிக்குள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத் தக்க வகையில் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2021/12/2021121533.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி