தூத்துக்குடி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், காலியாக உள்ள மாவட்ட வள வல்லுநர் - பண்ணை (District Resource Person (Farm) பணியிடத்திற்கு ஒப்பந்த முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | மாவட்ட வள நல்லுநர் (பண்ணை ) |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 01 |
வேலை வகை | ஒப்பந்த முறை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 10/01/2023 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் பூர்த்தி செய்து விரைவு அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும். |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி. |
கல்வித் தகுதி | இளங்கலை பட்டப்படிப்பு (Agriculture/ Veterinary Science/ Horticulture)முதுகலை பட்டப்படிப்பு (Business Administration in Supply Chain management is preferable) |
அதிகாரப்பூர்வ தளம் | https://thoothukudi.nic.in/ |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
சம்பள விவரம்:
முன் அனுபவம் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்படும்.
10 வருடங்கள் மேல் அனுபவம் கொண்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கப்படும். 6 - 8 வருடம் வரை உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2500-ம், 2 - 6 வருடம் வரை உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000ம் வழங்கப்படும்.
பொதுவான விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பதையும் நிராகரிக்கும் உரிமை அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை நேரிலோ
(அல்லது)
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101,
தூத்துக்குடி மாவட்டம்.
என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 10-012423 அன்று வைக்க வேண்டும். மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி விண்ணப்ப படிவத்தை தூத்துக்குடி மாவட்ட www.thoothukudi.nic.in இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.