கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரம் : தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்திற்கு பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. புள்ளியில், பி.எஸ்.சி. கணிதம் (10+2+3) என்ற முறையில் பட்டம் பெற்று இருக்கவேண்டும்.
அனுபவம் : ஏதாவது ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் தகவல் பகுப்பாளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.06.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.06.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.
தொலைபேசி எண் : 0422 2300305
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/06/2022060143.pdf
என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy