Home /News /employment /

கன்னியாகுமரி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்- நாளை கடைசி நாள்

கன்னியாகுமரி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்- நாளை கடைசி நாள்

ஊராட்சி ஒன்றியத்தில் வேலை

ஊராட்சி ஒன்றியத்தில் வேலை

TN government jobs : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கன்னியாகுமாரி மாவட்டம் , குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , இரவு காவலர் , பதிவு எழுத்தர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து 16/08/2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பதவியின் பெயர்

    • உதவியாளர்

    • இரவு காவலர்

    • பதிவு எழுத்தர்


    சம்பளம்

    • உதவியாளர் - ரூ. 15,700 - ரூ.50,000

    • இரவு காவலர் - ரூ. 15,700 - ரூ.50,000

    • பதிவு எழுத்தர் - ரூ. 15,700 - ரூ.50,000 என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.


    வயது விவரம்

    01/07/2022ம் தேதியின் படி SC/ST/SC(a) - 37 , MBC/DNC - 34 ,BC - 34 , OC - 32 வயதில் இருக்க வேண்டும்.

    மொத்த பணியிடங்கள்

    உதவியாளர் - 03

    இரவு காவலர் - 01

    பதிவு எழுத்தர் - 01

    கல்வித் தகுதி மற்றும் பிற தகுதி விபரங்கள் : 

    உதவியாளர் - 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

    இரவு காவலர் - தமிழில் எழுதவும் , படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    பதிவு எழுத்தர் - 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கடைசி நாள் :  விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ALSO READ  | இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - முழு விவரம்
     நிபந்தனைகள் :

     

    1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

    2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

    3. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையாளர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், குருந்தன்கோடு அஞ்சல் 629803 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.08.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி