முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தூய்மை பணியாளர்‌ பணி... தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - இன்றே கடைசி நாள்

தூய்மை பணியாளர்‌ பணி... தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - இன்றே கடைசி நாள்

வேலை

வேலை

இன்றே கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் இன்று மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளவும்.

  • Last Updated :

ஈரோடு மாவட்டம் நாசியனூர் பேரூராட்சியில் அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் - 2 பணியிடங்களை இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்திட இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள் : 

 நிறுவனம்நசியனுர் பேரூராட்சி, ஈரோடு (Erode Town Panchayat Office)
வேலை வகைதமிழக அரசு
வேலையின் பெயர்தூய்மை பணியாளர்‌ (Sanitary Worker)
காலிப்பணி இடங்கள்02
பணியிடம்ஈரோடு
தேர்ந்தெடுக்கும் முறைநேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
வயது21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி15.09.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees
சம்பள விவரம்ரூ.15700/-
விண்ணப்ப முறைமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதிதமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 5ம், 8ம், 10ம், 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தூய்மை பணியாளர்‌ (Sanitary Worker) வேலைக்கு நிபந்தனைகள் :

  • விண்ணப்பங்கள்‌ பதிவஞ்சல் மூலமாக‌ மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌.
  • நேரில்‌ அளிக்கும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.
  • குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரம்‌ பதிவஞ்சல்‌ வாயிலாக தெரிவிக்கப்படும்‌.

தூய்மை பணியாளர்‌ (Sanitary Worker) வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து விவரங்களை காண்க.
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் விவரங்களை நிரப்பிடவும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக‌ மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌. நேரில்‌ அளிக்கும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://erode.nic.in

இந்த லிங்கில் சென்று காணவும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 15.09.2021 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விண்ணப்பத்தினை செயல் அலுவலர், நசியனூர், பேரூராட்சி அலுவலகம், 3 திங்களூர் ரோடு நசியனூர் ஈரோடு 638107 என்ற முகவரிக்கு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பித்து கொள்ளவேண்டும் .

அதிகாரபூர்வ அறிவிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Job Vacancy