ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எஸ்எஸ்சி தேர்வர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உயர் கல்வித்துறை முக்கிய உத்தரவு

எஸ்எஸ்சி தேர்வர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உயர் கல்வித்துறை முக்கிய உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் நடைபெறும் டிசம்பர் 14 முதல் 16 வரையிலான நாட்களில்  எந்தவித பருவத் தேர்வுகளும் நடத்தப்படக் கூடாது- தமிழ்நாடு உயர்கல்வித் துறை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வுத்துறை எழுத்துத் தேர்வு நடைபெறும் கால கட்டத்தில், தமிழக பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று உயர்கல்வித் துறை ஆணையிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், அதே நாட்களில் பல்கலைக்கழக முதுநிலை தேர்வை எழுத வேண்டிய நிலை உருவாகியது.

இந்நிலையில், மாணவர்களின் இந்த இக்கட்டான சூழலை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் மூலம் தமிழ்நாடு முதல்வருக்கு கொண்ட சென்றார். அவர் தனது ட்விட்டர் பதிவில், " இந்திய வானிலை மையத்தின் தேர்வு தேதிகளும், தமிழக பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வு தேதிகளும் மோதுவதால் தமிழ் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சென்னை பல்கலைக் கழகம் தேதியை மாற்றிவிட்டது. மற்ற பல்கலைக் கழகங்களும் தேதிகளை மாற்ற  அறிவுறுத்த வேண்டுகிறேன்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து  பாட்டாளி  மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட செய்திக்  குறிப்பில், " 2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும். அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும்"என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,   இந்திய வானிலை ஆய்வுத்துறையில் அறிவியல் உதவியாளர் எழுத்துத் தேர்வு நடைபெறும் அதே காலகட்டத்தில், நடைபெறுவதாக இருந்த அனைத்து உயர்கல்வித் தேர்வுகளையும் ஒத்தி வைக்க தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அனுப்பிய சுற்றரிக்கையில், "எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் நடைபெறும் டிசம்பர் 14 முதல் 16 வரையிலான நாட்களில்  எந்தவித பருவத் தேர்வுகளும் நடத்தப்படக் கூடாது" என்று தெரிவித்துள்ளது.

First published:

Tags: Central Government Jobs, SSC